• May 13 2024

எஸ்.ஜே.சூர்யாவுடன் மோதவுள்ள நடிகர் விஜய்சேதுபதி-வசூலில் எது முதல் இடத்தைப் பிடிக்கும்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாலி என்ற திரைப்படத்தின் மூம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் எஸ்.ஜேய்.சூர்யா. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் எடுத்த இவர் தற்பொழுது கதாநாயகனாகவும் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. படத்தில் தனுஷ் கோடி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டி இருப்பார்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவரது நடிப்பில் பொம்மை, கடைமயை செய் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் கடமையை செய் படத்தை இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இப்படத்தை தமிழகத்தில் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடவுள்ளது.

இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன் மற்றும் சேசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆனால், இதற்கு முன்பே ஜூன் 24-ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதனையடுத்து விஜய் சேதுபதி படமும், எஸ்.ஜே.சூர்யாவின் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.இதனால், எந்த படம் அதிகம் வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement