• May 12 2024

விக்ரம் படத்தை மீண்டும் பார்க்கும் ரசிகை…இது தான் காரணமாம்….!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 3-ஆம் திகதி வெளியாகி மாஸ் ஹிட் கொடுக்கும் திரைப்படம் தான் விக்ரம். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும், இப்படத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படம், உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பிரமாண்டமாக ரிலீசானது. கைதி, மாஸ்டர் போன்ற போன்ற ஹிட் படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் படம் வெளியாகி மூன்றே நாட்களில் உலக 150 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அயல் மாநிலமான கர்நாடகாவில் 3 நாட்களில் ரூ.10 கோடி வரை வசூலித்திருக்கிறது. பெங்ளூரில் வசிக்கும் தமிழ் ரசிகை ஒருவர் படம் பார்க்க டிக்கெட் வாங்கியிருக்கிறார்.

ஆனால் படம் தொடங்கி 20 நிமிடங்கள் கழித்து தான் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். முதல் 20 நிமிட கதையை மிஸ் செய்து விட்டதால் மீண்டும் படம் பார்க்க தியேட்டருக்கு செல்ல இருக்கிறார். ஆனால் படம் துவங்கி 20 நிமிடங்கள் கழித்து தான் தியேட்டருக்கு சென்றிருக்கிறார்.

படம் மிகவும் பிடித்திருப்பதால் தான் மீண்டும் தியேட்டருக்கு செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்ல சனி, ஞாயிறு என்று 2 நாட்களும் சென்று விக்ரம் படத்தை 2 முறை பார்த்தவர்களும் இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் பத்தல பத்தல என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தன் படத்திற்கு அமோக வரவேற்பு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement