• May 13 2024

நம்ம சரத்குமாருக்கு இப்பிடி ஒரு நிலையா…தளபதி 66 குறித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சியின் கூட்டணையில் இணைகிறார் நம்ம தளபதி. இயக்குநர் வம்சி நடிகர் கார்த்தி- நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த தோழா படத்தை இயக்கி பிரபல்யமானவர்.

சமீபகாலமாக ஆக்சன் கதைக்களத்தை தேர்வு செய்து வந்த விஜய் சென்டிமென்டுக்கு பெயர் போன இயக்குநருடன் கைகோர்த்து இருப்பது ரசிகர்களை மீண்டும் 90 ஸ்-க்கு ஈர்த்து செல்லும் வாய்ப்பு உள்ளது என எதிர்பார்கின்றனர். தயாரிப்பாளர் தில் ராஜா இந்த படத்தை தயாரித்து வருகின்றார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். விஜயின் குடும்பத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தின் முதல் படப்பிடிப்பு சென்னையிலும்,இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றதை அடுத்து முழு படமும் சென்னையில் தான் நடைபெறும் என தெரிகிறது.

இதன் ஒரு பகுதியாக நடிகை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் சரத்குமார் இருக்கும் படத்தை பகிர்ந்து தளபதி 66 படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து சரத்குமார் நடிப்பது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சரத்குமார், விஜய் 66 படத்தின் கேரக்டர் குறித்த கேள்விக்கு தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றேன்.. இதில் என்ன நடிக்கிறேன், எப்படி நடிக்கிறேன், என்ன கேரக்டர் பண்ணுகிறேன் என்பதை வெளியே சொல்ல முடியாத சூழலில் உள்ளேன்.

எப்படியும் உங்களுக்கு தெரியாமல் இருக்காது. தளபதி 66 அப்டேட்டை இயக்குநர் அவர்களும், தயாரிப்பாளர் அவர்களும் நேரடியாக கலந்து பேசுகின்ற கலந்துரையாடலில் தெரிவிப்பார்கள் என கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement