• May 21 2024

'லியோ' இசை வெளியீட்டு விழா நடக்காதா..? வெளியான பரபரப்பு தகவல்... உண்மை என்ன..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக தயாராகி இருக்கும் திரைப்படம் லியோ. இப்படமானது அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் மூவியாக அமைந்துள்ளது.


இப்படத்தின் கதாநாயகனாக விஜய் நடிக்க அவருடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத் , அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் 1மாதம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அத்தோடு இசைவெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஏற்கெனவே வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்களுக்கும் போலீசுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றிருந்தமை நம் அனைவருக்கும் தெரியும். அத்தோடு சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் கூட பல பிரச்சினைகள் இடம்பெற்றிந்தன.


இந்நிலையில் லியோ இசைவெளியீட்டு விழாவிலும் ஏதாவது பிரச்சினைகள் வந்தால் அது படத்திற்கே மிகப்பெரிய தடையாக அமைந்து விடும் என்பதால் இசை வெளியீட்டு விழாவை விஜய் நிகழ்த்த வேண்டாம் எனக்கூறியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இது உண்மையான தகவல் அல்ல. வதந்தி என தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் செப்டம்பர் 30-ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நிகழ்வதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. 

Advertisement

Advertisement