• Sep 21 2023

காதலியை கரம்பிடித்த 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர்... எத்தனை பேர சீட் பண்ணுவா..? திட்டித் தீர்த்த சக நடிகை..!

Prema / 6 days ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் ‘பாரதி கண்ணம்மா’ தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த சீரியலாகவும் இது அமைந்திருந்தது. 


இந்த சீரியலில் அகில் கதாப்பாத்திரத்தில் பாரதியின் தம்பியாக முதலில் நடித்துக்கொண்டிருந்தவர் நடிகர் அகிலன். பின்னர் சீரியலை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் நடிகர் அகிலன் தற்போது தனது காதலியான அக்‌ஷயா முரளிதரனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த தனது திருமணப் புகைப்படங்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பலரும் இவருக்கு வாழ்த்துத் தெரிவித்த அதேநேரத்தில் இவருடன் நடித்த சக நடிகை ஒருவர் கமெண்டின் மூலமாக அவரை திட்டி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.


அதாவது பாரதி கண்ணம்மா சீரியலில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி மனோகரன் என்பவர் "இதுக்கு முன்னாடி எத்தனை பேரை சீட் பண்ணுன அதையும் மென்ஷன் பண்ண வேண்டியதுதானே? கொஞ்சம் கூட வெட்கம் இல்லல்ல" எனப் பதிவிட்டிருக்கின்றாராம்.

கண்மணி மனோகரின் இந்தப் பதிவானது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement