திரைப்படத் தயாரிப்பாளராக பலராலும் அறிப்பட்டவர் தான் ரவீந்தர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர்
இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை போன வருடம் திருமணம் செய்து கொண்டார். சிலர் வாழ்த்து கூறி இருந்தாலும் பலர் எதிர்மறை விமர்சனக்கருத்தையே முன்வைத்தார்கள். ஆனாலும் இத்தம்பதி அவ்வாறாக விமர்சனங்களுக்கு செவி சாய்க்காது தமது வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அதாவது திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் போலி ஆவணங்களைக் காண்பித்து பணத்தைப் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, கடந்த 7-ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ரவீந்தரின் மனைவி மகாலட்சுமி தன் கணவருக்கு ஜாமீன் வேண்டும் எனக் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்தவகையில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒன்று ரவீந்தருக்கு ஜாமீன் கேட்டும், மற்றையது சிறையில் முதல் வகுப்பு அறையில் அதாவது விஐபிக்களுக்கு கொடுக்கப்படும் ஏ கிளாஸ் வேண்டும் எனவும் கேட்டு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரை விடுவித்தால் முக்கிய சாட்சிகளை அவர் அழிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது எழும்பூர் நீதிமன்ற மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ரேவதி குறித்த மனுக்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
Listen News!