• May 21 2024

என்னது இந்த முறை 2டைட்டில் வின்னரா..? ஜிபி முத்து கொடுத்த Biggboss அப்டேட்... வெளியானது புதிய ப்ரோமோ வீடியோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என்று எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. 


100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு பிரபலங்கள் தங்களுடைய முன்பின் தெரியாத பிரபலங்களுடன் இந்த வீட்டில் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய விடயமாக உள்ளது.

அந்தவகையில் இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்களின் விபரமும் அவ்வப்போது கசிந்த வண்ணம் தான் இருக்கின்றது. மேலும் இந்தமுறை 2வீடு எனவும், 2பிக்பாஸ் எனவும் ஏற்கெனவே தகவல் வெளியாகி இருக்கின்றது.


இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் குழுவினர் ஜிபி முத்து நடித்த புது புரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் ஜிபி முத்து தனது பாணியிலே லெட்டர் ஒன்றினை வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்தவகையில் ஜிபி முத்து கூறுகையில் "ஒரு வீட்டையே சமாளிக்க முடியாது இதுல ரெண்டு வீடா" என தனது பாணியில் கூறுகின்றார்.

அதுமட்டுமல்லாது "2 வீடுனா இந்த முறை 2 டைட்டில் வின்னரா" என்கிற கேள்வியையும் ஜிபி முத்து எழுப்பி உள்ளார். எனவே 2டைட்டில் வின்னர் என கூறி ஜிபி முத்து மேலும் மேலும் ரசிகர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றார். எது எவ்வாறாயினும் 1-ஆம் தேதி வரைக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement