• Dec 04 2024

என்ன கோபி உடம்பெல்லாம் குப்புனு வேர்க்குதா? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த பாக்கியா

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா  வீட்டிற்கு வந்ததும் இனியா ஓடிப்போய் ஏன் எழிலின் படப் பூஜைக்கு வரவில்லை? ரெஸ்டாரண்டில் நடந்த பிரச்சனை பற்றி ஏற்கனவே தெரிந்தும் ஏன் சொல்லவில்லை? என கேள்வி மேல் கேள்வி கேட்கின்றார். கூடவே செழியனும் வந்து அதை பற்றி துருவி துருவி கேள்வி கேட்கின்றார்.

ஆனாலும் பாக்கியா தனக்கு இரண்டு நாளாக ரெஸ்ட் இல்லை. தான் மேலே போறேன் என்று சொல்லவும், இனியா மீண்டும் மீண்டும் உனக்கு எங்களை விட ரெஸ்டாரண்ட் தான் முக்கியமா? அண்ணா எவ்ளோ ஃபீல் பண்ணிச்சு தெரியுமா? என்று சொல்லிக்கொண்டே உள்ளார்.

d_i_a

இதைக்கேட்ட செல்வி என்ன நடந்தது என்று தெரியாமல் பேச வேண்டாம் என்று, எழில் தான் பட பூஜைக்கு வர வேண்டாம் என்று சொன்னதாக எல்லாரிடமும் சொல்லுகின்றார். இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றார்கள். இது உண்மையா என்று கேட்க, ஆமாம் என்று நடந்தவை எல்லாவற்றையும் பாக்கியா  சொல்லுகின்றார்.

அதன் பின்பு வீட்டில் உள்ளவர்கள் மாறி மாறி கோபி தொடர்பிலும் எழில் தொடர்பிலும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, தனக்கு பசிக்கிறது தான் சாப்பிட போகின்றேன் என்று பாக்கியா கிளம்பி விடுகின்றார். அதன் பின்பு பாக்யா சாப்பிடும் போதும் ஈஸ்வரி ஏன் இப்படி எழில் பண்ணினான் என்று கேட்க, இதற்கு பின்னாடி எதுவும் காரணம் இருக்கும் என்று பாக்யா சொல்லுகின்றார்.


அடுத்த நாள் காலையில் வந்த செல்வி பாக்யாவிடம் ஒரு டீ கேட்டு விட்டு இன்னும் கோபி சார் வீட்டுக்கு போலீஸ் வரல போல என்று வெளியே போய் பார்க்கின்றார். இன்னொரு பக்கம் ராதிகா கோபி செய்ததை நினைத்து அவருக்கு பேசிக் கொண்டிருக்க, கமலா கோபிக்கு சப்போர்ட் பண்ணுகின்றார். அந்த நேரத்தில் போலீஸ் வந்து உங்கள் மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதாகவும் அதை விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறும் சொல்லுகின்றார்கள்.

இதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகின்றார். மேலும் போலீஸ் கோபி வீட்டுக்கு வந்ததை அறிந்த பாக்யாவும் செல்வியும் வாசலில் நின்று நடப்பதை பார்த்துக்கொண்டு உள்ளார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement