• Mar 25 2026

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 12ம் தேதி வெளியான திரைப்படம் தான் அயலான். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிய இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

ஏலியன் பூமிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை ஒன்லைனாக கொண்டு தான் இப்படம் உருவானது.படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மெய் சிலிர்க்க வைப்பதாகவும்; கதை சாதாரண கதைதான் என்றாலும் ஏலியனையும், தன்னுடைய ஸ்க்ரீன் பிளேவையும் வைத்து ரவிக்குமார் காப்பாற்றிவிட்டார் என்றும் ரசிகர்கள் கூறினர். 


 இந்நிலையில் அயலான் திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி படமானது இரண்டாவது நாளில் 4.51 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 

முன்னதாக படம் வெளியான முதல் நாளில் 5 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முதல் நாளை ஒப்பிடுகையில் இரண்டாவது நாள் வசூல் கொஞ்சம் டல்லடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம் இரண்டு நாட்களில் படம் 10 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது.


Advertisement

Advertisement