• Apr 27 2024

திடீரென நிறுத்தப்பட்ட 'ஜெயிலர்' படப்பிடிப்பு... 15 நாட்கள் ஒத்தி வைத்தமைக்கான காரணம் என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

"சூப்பர் ஸ்டாரு யார் என்று கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்" என்னும் பாடலுக்கு அமைய தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தற்போது 'ஜெயிலர்' திரைப்படம் பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது. 

அதாவது 'கோலமாவு கோகிலா, டாக்டர்' போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார். அதுமட்டுமல்லாது சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்து வருகிறார்.


மேலும் இவர்களுடன் இணைந்து யோகிபாபு, வஸந்த் ரவி, மலையாள நடிகர் விநாயகன், கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அத்தோடு இப்படத்திற்கு ரொக் ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். 

இப்படத்தின் உடைய ஷூட்டிங் ஆனது கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை காலமும் இதில் 50 சதவீத படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது.


அந்தவகையில் இப்படத்திற்காக சென்னையில் உள்ள ஆதித்ய ராம் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஜெயில் செட் அமைத்து அதில் ஷூட்டிங்கை வேகமாக நடத்தி வந்த படக்குழு, சில காட்சிகளை வெளிப்புறத்திலும் எடுக்க திட்டமிட்டு இருந்தது. 

இந்நிலையில் தான் தற்போது ஒரு ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஆனது கடந்த 15 நாட்களாக நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. இதற்கான முக்கிய காரணம் என்னவெனில் சென்னையில் கொட்டித்தீர்த்து வரும் பயங்கரமான கனமழை தானாம். 


அதுமட்டுமல்லாமல் தற்போது மிகவும் குளிரான சூழலும் நிலவி வருகிறது. இந்தக் குளிரில் ரஜினியை நடிக்க வைக்க முடியாது என்பதால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஷூட்டிங்கை 15 நாட்கள் நடத்தாமல் இருந்து வந்தார்களாம். 

இருப்பினும் இன்று முதல் மீண்டும் அடுத்த கட்ட ஷூட்டிங்கை நல்ல படியாக தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement