• May 21 2024

வீட்டையே மாத்திட்டோம்.. அப்போ விளையாட்டு என்னவாகும்..? வெளியானது Biggboss-7 அடுத்த வீடியோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சியானது தமிழ், ஹிந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் இடம்பெற்று வருகின்றது. 


அந்தவகையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன்-7 சமீபத்தில் ஆரம்பமானது. இதனையடுத்து வருகிற 1-ஆம் தேதி தமிழ் பிக்பாஸ் சீசன்-7 ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு கமல்காசன் நடித்த ஒவ்வொரு ப்ரோமோ வீடியோவினையும் வெளியிட்டு வருகின்றனர். 


இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பமாக இன்னும் 4நாட்களே எஞ்சி உள்ளன. இந்நிலையில் கமல் வெளியிட்டுள்ள மற்றுமோர் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் கூறுகையில் "விளையாட்டினால் சில பேர் மாறி இருக்காங்க, சில பேர் விளையாட்டையே மாற்றி இருக்காங்க, ஆனால் இந்த வாட்டி வீட்டையே மாற்றி இருக்கோம், விளையாட்டு என்ன ஆகுதுன்னு பார்ப்போம்" எனக் கூறி இருக்கின்றார். 

இந்த வீடியோவில் கமல் கூறிய ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் அதிகரித்துள்ளது. இதோ அந்த வீடியோ..! 


Advertisement

Advertisement