• May 02 2025

இளையராஜாவின் இசை நிகழ்வால் கடுப்பாகிய ரசிகர்கள்..! நடந்தது என்ன.?

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

கரூரில் சமீபத்தில் நடைபெற்றிருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் சினிமா இசை வரலாற்றின் தந்தையாகப் போற்றப்படும் இளையராஜாவை நேரில் காணும் ஆசையுடன் ஆயிரக்கணக்கானோர் தங்களது பணத்தைக் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர். எனினும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏற்பட்ட குழப்பம், ஏற்பாடுகளின் மோசமான நிலை, மோசமான இடவசதி என்பவற்றால் ஏராளமான ரசிகர்கள்  ஏமாற்றம் அடைந்து கொண்டனர்.


இளையராஜாவின் இசையை நேரில் கேட்கும் வாய்ப்பு என்றாலே அது ஒரு ரசிகனுக்கு கனவு போல இருக்கும். அதனால் தான், அந்தக் கனவை நிறைவேற்ற, 500 ரூபாவிலிருந்து 50,000 வரை பணம் செலுத்தி டிக்கெட்டுகளை வாங்கி இருந்தனர். இதில் VIP, VVIP மற்றும் CLASSIC ZONE எனப் பல்வேறு பிரிவுகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் நேரம் நெருங்கியவுடன், உள்ளே வந்த ரசிகர்களுக்கு இடமின்றி சுழலும் நிலை ஏற்பட்டது. “வீட்டிலிருந்தே இசை கேட்கலாம்னு தோணுதே...” எனப் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நிகழ்ச்சிக்கு வந்ததன் ஒரே நோக்கம் இளையராஜாவின் இசையை நேரில் கேட்கத் தான். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முழுமையாக ஒழுங்கமைக்காத தனியார் நிறுவனத்தால் பலரும் ஏமாற்றம் அடைந்து கொண்டனர். இந்த நிலையில், பலர் உள்ளே நுழைய முடியாத கோபத்தில் தாங்கள் வாங்கிய டிக்கெட்டுகளை அங்கேயே கிழித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.


Advertisement

Advertisement