• Aug 23 2025

கவுன்சிலர் மனதையே மாற்றிய சம்பவம்.. பாக்கியாவுக்கு கிடைத்த விடிவுகாலம்.! நடந்தது என்ன.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி ஈஸ்வரியைப் பாத்து நான் அப்புடி சொன்னதுக்கு மன்னிப்பு கேட்கிறேன். கதவை திறவுங்க அம்மா என்று சொல்லுறார். அதுக்கு ஈஸ்வரி பாக்கியாவக் கூப்பிட்டு எனக்கு யாரையும் பாக்க விருப்பம் இல்ல என்று சொல்லுறார். மேலும் பேச வேண்டியதெல்லாம் பேசியாச்சு பிறகு ஏன் இங்க வந்துநிக்கிறீங்க என்று கேட்கிறார்.

இதனை அடுத்து கோபி நான் அப்புடி பேசினதுக்கு மன்னிச்சிருங்க இனிமேல் இப்படி நடக்காது என்று சொல்லுறார். பின் ஈஸ்வரி பாக்கியாவப் பாத்து கோபி போய்ட்டானா, பேசுறதெல்லாம் பேசிட்டு sorry சொன்னால் எல்லாம் சரிஆகிடுமா என்று கேட்கிறார். மேலும் நாளைக்கு வந்தால் கூட நான் அவன் கூட பேசமாட்டேன் என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து இனியா சுதாகர் மனைவியப் பாத்து இந்த room கதவைத் திறந்து விடுங்க நிதீஷிட்ட நான் தான் பிரச்சனையா என்று கேக்கணும் என்கிறார்.


மேலும் இனியா நிதீஷைப் பாக்க குடிச்சது மாதிரி தெரியல வேற ஏதோ நடந்திருக்கு என்று சொல்லுறார். பின் இனியா நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்கு ஏதோ மறைக்கிறீங்க என்கிறார். அதுக்கு சுதாகர் மனைவி வேற எதையோ கதைச்சு சமாளிக்கிறார். இதனை தொடர்ந்து பாக்கியா செல்விகிட்ட இனியாவுக்கு ஏதோ பிரச்சனை வந்த மாதிரி தோணுது என்கிறார்.

பின் பாக்கியா ரோட்டில நடந்து போகும் போது ஒரு அம்மா மயங்கி விழுகுறதை பாத்தவுடனே ஹாஸ்பிடலுக்கு கொண்டே சேர்க்கிறார். இதனை அடுத்து கவுன்சிலர் பாக்கியாவோட ரெஸ்டாரெண்டுக்கு வந்து நான் செய்த எல்லா தப்புக்கும் என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்லுறார். மேலும் இண்டைக்கு ரோட்டில மயங்கி விழுந்தது என்னோட மனைவி தான் அவளை காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement