• May 23 2026

'AK 64' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட ஆதிக் ரவிச்சந்தர்.. என்ன தெரியுமா.?

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

அஜித் குமார் நடிப்பில்,ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான “Good Bad Ugly” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தான் AK 64 என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, AK 64 குறித்த அப்டேட்டை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “GBU படத்தின் மூலம் பல இனிய நினைவுகளை உருவாக்கியுள்ளோம். அது ஒரு கனவு போல இருந்தது. அதுபோன்ற சிறப்பு தருணங்களை மீண்டும் உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்த அப்டேட் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. குறிப்பாக, அஜித் – ஆதிக் கூட்டணி மீண்டும் இணைவது உறுதி என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. அதே சமயம், அனிருத் இசை இணைவதால் படத்தின் ஹைப் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement