• May 01 2026

பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க தயாரான சிம்ரன்..! VJS வெளியிட்ட டைட்டில் வீடியோ

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சிம்ரன், தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பாலு சர்மா இயக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு 'டீச்சர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்தப் படத்தின் தலைப்பு டீஸரை நேற்று வெளியிட்டார்.

இயக்குநர் பாலு சர்மா 2022-ல் 'நீதோ' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து 2024-ல் 'உணர்வுகள் தொடர்கதை' என்ற படத்தை இயக்கினார்,  'டீச்சர்' அவரது மூன்றாவது இயக்கப் படமாகும்.

இந்தப் படத்தை காசி விஸ்வநாதன் Whitenights Entertainments சார்பிலும், சமீர் பரத் ராம் Super Talkies சார்பிலும் இணைந்து தயாரிக்கின்றனர். 

இந்த படத்தின் தலைப்பு போஸ்டரை வைத்துப் பார்க்கும்போது, படத்தில் கிரைம் மற்றும் வகுப்பறை சம்பந்தப்பட்ட கதை கலந்து வருவதாக தெரிகிறது. படத்தின் கதை, மீதமுள்ள படக்குழு மற்றும் நடிகர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள நாயகியாக வலம் வரும் சிம்ரனின் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு மட்டும் சிம்ரன் மூன்று படங்களில் நடித்துள்ளார். அதன்படி, ஆதி பினிசெட்டி நடிப்பில் வெளியான 'சப்தம்' என்ற உளவியல் திகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தில் சிறப்பு தோற்றம் கொடுத்தார் . 1999-ல் அஜித்துடன் நடித்த 'வாலி' படத்தின் 'பிரியா' என்ற கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாக இந்த வேடம் அமைந்தது. 

சசிகுமாருடன் இணைந்து நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' படத்தில் இலங்கை தமிழ் குடும்பத்தின் தாயாக நடித்த அவர், விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்தார்.

'டீச்சர்' படத்துடன் கூடவே, சன்னி தியோலுடன் இணைந்து 'கப்ரு' என்ற படத்திலும் சிம்ரன் நடிக்கவுள்ளார். இதனால் இனி வரும் காலங்களில் சிம்ரன் தொடர்ச்சியாக திரையில் காணப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.


Advertisement

Advertisement