• May 16 2025

முடிஞ்ச கல்யாணத்துக்கு மேளம் வாசிக்கமால், ஜாலியா படத்தப் பாருங்க..!- சந்தானம் பேட்டி..!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறி தனக்கென ஒரு பிரமாண்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் சந்தானம். அவர் நடித்த புதிய படம் "DD நெக்ஸ்ட் லெவல்" இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் வெளியீட்டை தொடர்ந்து, படம் பற்றியும், அதனைச் சுற்றியுள்ள ஒரு சிறிய பாடல் சர்ச்சை குறித்தும் சந்தானம் நேரடியாக எதிர்வினை தெரிவித்துள்ளார்.


நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் நடிகர் ஆர்யாவின் ஷோ பீப்பிள் இணைந்து தயாரித்துள்ள "DD நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தை இயக்கியவர் பிரேம் ஆனந்த். டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றியின் தொடர்ச்சியாக வந்துள்ள இந்த படத்தில் சந்தானம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் செல்வராகவன், கௌதம் மேனன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கலகலப்பும் திரில்லரும் கலந்த ஒரு மகிழ்ச்சித் திரைப்படம் என ரசிகர்கள் இதனைப் பாராட்டி வருகின்றனர். திரைப்பட வெளியீட்டையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், சந்தானம் தனது திரைப்படம் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.


அதன்போது அவர் கூறியதாவது, படத்தை எல்லாரும் கண்டிப்பாக திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றதுடன் அதன்போது, ஒருவர் அந்தப் பாடல் விவகாரம் குறித்த கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு சந்தானம் முடிஞ்ச கல்யாணத்துக்கு ஏன் மேளம் வாசிக்கணும்.." என்று பதிலடி கொடுத்திருந்தார். மேலும் படம் தியட்டரில் நல்ல படியாக ஓடுவதனைக் கொண்டாடுவோம்." எனக் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement