இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் ரசிகர்களை பொருத்தவரைக்கும் போர் அடிக்காமல் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழக, கேரள ரசிகர்களுக்கும் கொண்டாட கூடிய ஒரு படமாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் ஏகப்பட்ட கேமியோக்கள் மற்றும் ரெபரன்ஸ் வைத்து வெங்கட் பிரபு கமர்சியல் படமாக கோட் படத்தை கொடுத்துள்ளார். உலக அளவில் வெளியான பல்வேறு படங்களில் இளம் வயதில் காணாமல் போகும் மகன் வில்லனிடம் சிக்கி பழிவாங்கும் கதையை பார்த்து பார்த்து புளித்து போனாலும் அந்த கதையை தனித்திறமையுடன் எடுத்துள்ளார் வெங்கட் பிரபு.
இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகி பாபு, லைலா, சினேகா, மோகன், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அது மட்டும் இன்றி இந்த படத்தில் கேமியா ரோலில் சிவகார்த்திகேயன், திரிஷா, தல வரும் காட்சிகள் திரையரங்குகளை அதிர செய்துள்ளன.
இந்த படத்தில் விஜய் வைத்து கிளைமாக்ஸ் காட்சியை முடித்துள்ள விதம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும், வில்லனாக மோகன் சிறப்பாக நடித்திருந்தாலும், அவரது கதை மற்றும் கேரக்டர் வடிவமைப்பு பழைய நம்பியார் காலத்து டைப் ஆக உள்ளதாக பேசப்படுகிறது.
ஹீரோவை பழிவாங்க பல வருடங்கள் வில்லன் காத்திருந்து பழிவாங்கும் கதையை மோகன் கேரக்டரில் நைசாக உருவி சொருகியுள்ளார் வெங்கட் பிரபு. அதிலும் புதுமை கொடுக்க முயன்றாலும் இந்த படம் சற்று டல் அடிக்கின்றது. மேக்கில் மெனக்கெட்ட அளவுக்கு கதைக்கும் வில்லன் கதாபாத்திரத்துக்கும் பெரியளவில் மெனக்கெடவில்லை என்று தான் தெரிகிறது.
மேலும் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி நடக்கும் இடத்தில் உலகமே பார்க்கும் நிகழ்ச்சியில் அசால்டாக இப்படி ஒரு ஆக்சன் பிளாக்கை எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் வைத்துள்ளார் வெங்கட். எந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கும் என்பது கேள்விக் குறியாக தான் உள்ளது.
ஆனாலும் இறுதியில் தல தோனியும் தல அஜித்தும் தான் கிளைமேக்ஸ் காட்சியைவிஜய்க்காக காப்பாற்றுகின்றார்கள் என தற்போது கோட் படத்தின் குறைகள் பற்றி கருத்துக்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!