தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். மற்ற நடிகர்களுக்கு எந்தளவிற்கு ரசிகர் கூட்டம் உண்டோ அந்தளவிற்கு இவருக்கு என்றும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.
விஷாலின் நெருங்கிய நண்பர்களான சக நடிகர்கள் பலரும் திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள். ஆனால் விஷால் மட்டும் இன்றுவரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றார்.
இருப்பினும் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா என்பவருடன் திருமணம் நடைபெறவிருந்தது. இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட சிறப்பாக நடைபெற்றது.
ஆனால், தீடீரென இந்த திருமணம் நின்றுபோனது. இதன்பின் விஷால் திருமணம் குறித்து தொடர்ந்து பல வதந்திகள், செய்திகள் என வெளிவந்த வண்ணம் தான் உள்ளன.
இந்நிலையில் விஷால் தற்போது பிரபல நடிகையான அபிநயாவை காதலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அபிநயா 'நாடோடிகள், ஆயிரத்தில் ஒருவன், குற்றம் 23' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்படங்களில் மட்டுமின்றி விஷால் நடிப்பில் வெளிவந்த பூஜை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தவகையில் அபிநயாவும் விஷாலும் சமீபகாலமாக காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதகாவும் ஒரு செய்தி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கின்றது.
Listen News!