• Jan 19 2025

கோர விபத்தில் உயிரிழந்த நடிகை.. அதே சீரியல் நடிகரும் விபரீத முடிவில் மரணம்! உச்சகட்ட அதிர்ச்சி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் Trinayani என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவராக காணப்பட்டார். அவரது மரணம் ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது.

இந்த நிலையில், நடிகை பவித்ராவின் மரண செய்தியில் இருந்து மீளாத  திரை உலகினருக்கு மற்றும் ஒரு அதிர்ச்சி செய்தி  கிடைத்துள்ளது.

அதாவது நடிகை பவித்ராவின் நெருங்கிய நண்பரான சந்திரகாந்த்  தற்போது தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரும் அதே சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் தானாம். பவித்ரா சென்ற காரில் அவரும் சென்றுள்ளார்.


குறித்த நடிகர் உயிர் தப்பிய நிலையில் பவித்ரா இறந்துவிட்டார். அத்துடன் அவர்கள் இருவரும் காதலில் இருந்ததாகவும், விரைவில் அதை அறிவிக்க இருந்ததாகவும், அந்த நேரத்தில் தான் விபத்து ஏற்பட்டு பவித்திரா உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.


தற்போது பவித்ரா இறந்த துக்கத்தில் அவருடைய நண்பரும் காதலருமான சந்திரகாந்த் விபரீத முடிவெடுத்து உயிரிழந்து  உள்ளமை சின்னத்திரை ரசிகர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement