• Jan 18 2025

சொந்தக்காரரே போட்டு கொடுத்துட்டாரே.. குழலி திடீர் சந்தேகம்.. தங்கமயில் கல்யாணம் நின்றுவிடுமா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று அனேகமாக சரவணன் - தங்கமயில் திருமணம் நடைபெறும் காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு முன்னோட்ட காட்சிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது.

இன்றைய எபிசோடில் திருமணத்திற்கான வேலைகளை ராஜி ஓடி ஓடி செய்ய அவருடைய கணவர் கதிர் மிகுந்த வருத்தப்படுகிறார். ஏன் இவ்வளவு வேலை செய்கிறாய், கொஞ்சம் ரெஸ்ட் எடு என்று சொன்னாலும் ராஜி கேட்காமல் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருக்கிறார். அதனால் ஒரு கட்டத்தில் வருத்தம் அடைந்த கதிர், அவருக்கு ரொமான்ஸ் ஆக ஜூஸ் கொடுக்கும் காட்சியும் அதை மீனா சந்தோஷத்துடன் பார்க்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
 
இதனை அடுத்து மீனா தனது கணவர் செந்திலிடம் நமக்கு முறைப்படி திருமணம் ஆகவில்லை, குறைந்தபட்சம் ரிசப்ஷன் நடக்கும் என்றும், என்னுடைய அப்பா அம்மா கோபம் தணிந்து விடும் என்றும் எதிர்பார்த்தேன், ஆனால் கடைசி வரை நடக்கவில்லை, இந்த திருமண மேடையில் நாம் அந்த மாப்பிள்ளை பொண்ணு உட்காரும் இடத்தில் உட்கார்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்வோம், இதை வைத்து நான் ரிசப்ஷன் நடந்து விட்டதாக நினைத்துக் கொள்வேன்’ என்று கூறுகிறார்.

முதலில் மறுக்கும் செந்தில் அதன் பிறகு ஓகே சொல்லி அதில் உட்கார, குயிலி கணவரை போட்டோ எடுக்க சொல்லுகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பாண்டியன் வந்துவிட மீனா நினைத்தது நடக்காமல் போகிறது.



 இதனை அடுத்து பாண்டியன் மற்றும் பாக்கியம் குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்த மண்டபத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது உங்கள் சொந்தக்காரர்களை அதிகம் காணவில்லையே என்று பாண்டியன் கேட்க, வந்தார்கள் நீங்கள் பிஸியாக இருந்தீர்கள் என்பதால் தான் அறிமுகம் செய்யவில்லை என்று பாக்கியம் மற்றும் அவரது கணவர் சமாளித்தனர்.

அப்போதுதான் குழலிக்கு நகை குறித்த சந்தேகம் வந்தது, ஏன் தங்க நகை போடாமல் இந்த நகையை அணிந்திருக்கிறாய் என்று தங்கமயிலிடம் கேட்க சேலைக்கு மேட்ச் ஆக இருக்கும் என்று போட்டேன் என்று தங்கமயில் சமாளிக்கிறார். அப்போது  பாக்கியம் கல்யாண செலவிற்கான பணத்தை கொடுக்க, குழலி ’இப்போதே ஏன் பணம் கொடுக்க வேண்டும், திருமணம் முடிந்த பின்னர் தானே எவ்வளவு செலவானது என்று தெரியும்’ என்று கூறினார்.

இந்த நிலையில் தான் பாக்கியத்தின் உறவினர் திடீரென ’அதுதான் சொன்னதை விட அதிகமாக நகை போட்டு இருக்கிறார்களே, வேண்டுமானால் நகையை எடை போட்டு பார்த்துக் கொள்ளுங்கள் என்று போட்டுக் கொடுத்து விடுகிறார். அப்போது பாக்கியம் மற்றும் அவரது கணவர் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இருந்தாலும் எடை மட்டும் தானே போடுவார்கள், கவரிங் என்று தெரியாதே என்று கூற அதற்கு பாக்கியம் ஒருவேளை கொஞ்சம் விவரமானவர்கள் பார்த்தாலே அதை கவரிங் என்று தெரிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார். உடனே தராசை எடுத்து வாருங்கள் என்று ஒருவர் கூற அப்போது அதிர்ச்சி அடைந்த தங்கமயில் மயக்கம் போட்டு கீழே விழுவது உடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement