• May 19 2024

முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து இல்லை.. ரஜினிக்கு மட்டும் வாழ்த்து சொன்ன தனுஷ்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியான நிலையில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தலைவர், சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு வாழ்த்து என்று கூறிய நிலையில் அவருடைய முன்னாள் மனைவியான இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெயரை சொல்லாமல் விட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’லால் சலாம்’ படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியானது. இந்த ட்ரெய்லர் வெளியான ஒரு சில மணி நேரத்தில் பத்து லட்சத்துக்கு அதிகமான பார்வையாளர்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது


இந்த நிலையில் டிரைலர் வெளியான ஒரு சில நிமிடங்களில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் டிரைலர் வீடியோவை பகிர்ந்து, ’லால் சலாம்’படத்தின் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அந்த பதிவில் அவர் சூப்பர் ஸ்டார் மற்றும் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளாரே தவிர தனது முன்னாள் மனைவியான இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிட்ட வில்லை.

இதனை கவனித்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ரஜினிக்கும் ஒரு வாழ்த்து சொல்லி இருக்கலாமே என கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement