அபாரமான பேட்டிங் திறமை, கடைசி ஓவர்களில் காட்டும் தைரியமான ஆட்டம் மற்றும் எளிமையான குணாதிசயம் ஆகியவற்றால், குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் ரிங்கு சிங். இவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த புகைப்படத்தில், ரிங்கு சிங்குடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் ஒன்றாகக் காணப்படுகின்றனர். கிரிக்கெட் மற்றும் சினிமா உலகின் மூன்று முக்கிய பிரபலங்கள் ஒரே ஃப்ரேமில் இடம்பெற்ற இந்த புகைப்படம், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரிங்கு சிங் பகிர்ந்த இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது.
Listen News!