• May 21 2024

எல்லோர் மேலேயும் எகிறும் விக்ரமன்!- கலவர பூமியான பிக்பாஸ் வீடு- மூன்றாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.போட்டியாளர்கள் தமக்குள்ளேயே மோதிக் கொள்வதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது தனலெட்சுமியை அசல் ஒருமையில் பேசியதாக இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் அஸீம் புகுந்து சமாதானப்படுத்தி தனலெட்சுமியை வெளியே அழைத்து செல்ல முயன்றார்.ஆனால் அதற்குள் விக்ரமன் அதுகுறித்து கேட்க வந்தார்.

இதனால் அஸீம் –விக்ரம் இடையே வாக்குவாதம் எழுந்தது. அதை சமாதானம் செய்ய ஜி.பி.முத்து முயல, ஜி.பி.முத்துவிடமும் விக்ரமன் கோவமாகவே பேசினார். தொடர்ந்து விக்ரமனை அங்கிருந்து அழைத்து செல்ல ஏடிகே முயல, அவரிடமும் விக்ரமன் எரிந்து விழ கடுப்பான ஏடிகே திரும்ப பேச பிக்பாஸ் வீடே கலவரபூமியாக காட்சியளிக்கிறது இது குறித்த மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement