• Sep 20 2024

விக்ரம் சக்சஸ் மீட்: கமலுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறிய பிரபல நடிகர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளிலும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். கமலஹாசன் நடித்த இத் திரைப்படம் 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்தோடு வசூலில் அள்ளிக் குவித்து விடும் என்றும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். பிரபலங்கள் பலரும் விக்ரம் படக்குழுவினருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த படம் வெற்றி உறுதி என்ற வகையில் இந்த சக்சஸ் மீட்டில் கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

எனினும் இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது…

உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கமல் சாரை நேரில் சந்தித்து
ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப் பயணத்தில் ‘விக்ரம்’ நிச்சயம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும்’ என்று பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement