• May 20 2024

மாறுவேஷத்தில் இல்லை நிஜமாகவே விக்ரம் தான் பேசுகின்றேன்- டுவிட்டரில் இணைந்த விக்ரம்- அடடே இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் விக்ரம். இவர் தற்பொழுது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்திலும் மற்றும் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்துள்ளார். 

இதில் 'கோப்ரா' படம்  ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், 'பொன்னியின் செல்வன்' படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில்  'சியான் 61' நடித்து வருகின்றார். இப்படத்தின் பூஜை அண்மையில் தான் போடப்பட்டது.


இந்நிலையில் நேற்று டுவிட்டரில் இணைந்தது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் விக்ரம். இதனை தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், "எல்லாருக்கும் வணக்கம். நான் சீயான் விக்ரம். நிஜமாகவே நான் தான், மாறுவேஷத்தில் இல்லை. இந்த கெட்டப் ரஞ்சித் படத்திற்கு, ரெடி ஆகி கொண்டிருக்கிறேன். டுவிட்டரில் இணைவதன் மூலம் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு நிறைய விஷயங்களைத் தெரியப்படுத்தலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

அது எனக்கு சரி என்று பட்டது. டுவிட்டர் தொடங்கி பத்து, பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டது என நினைக்கிறேன். நான் கொஞ்சம் லேட் ஆனால் இது ஒரு நல்ல நேரம் என்று நினைக்கிறேன். இவை அனைத்தையும் விட, இந்த இணையதளத்தில் நிறைய அன்பு இருக்குமென்று கேள்விப்பட்டேன். எனவே அந்த அன்பை நாமும் கொஞ்சம் அனுபவிக்கலாம் என்று தான் தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement