• Apr 21 2025

முத்து மீனாவை வெளியே போக சொன்ன விஜயா? விஜயாவுக்கு செக் வைத்த முத்து! அதிரடியான திருப்பங்களுடன் Siragadikka Aasai

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதில் என்ன நடைபெறுகிறது என பார்ப்போம் வாங்க.


சுருதியின் அம்மா அப்பா ஏற்பாடு செய்தது போலவே இறுதியில் தாலி மாற்றும் பன்சன் முடிவடையும் கட்டத்தில் முத்து பிரச்சினை செய்யவே அது பெரிய சண்டையாகி சுருதி தனது அம்மா வீட்டுக்கு சென்று விடுகிறார். இந்த கோவத்தில் இருந்த விஜயா முத்து மீனா வீட்டுக்கு வரும் போது வெளிய போங்க இனி உங்களுக்கு இந்த வீட்டுல இடம் இல்லை என்று கூறுகிறார். 


இதனை கேட்ட முத்துவின் அப்பா ஏன் அவங்க வெளிய போகணும் என்று கேட்க முத்து வெளிய போனாதான் சுருத்தி வீட்டுக்கு வருவா என்று கூறுகிறார். அவ்ளோதானே சரி நாங்க வெளிய போறோம் என்று முத்து கூறிவிட்டு மீனா உன்னோட ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வா நாங்க போவோம் என்று கூறுகிறார். 


பிறகு அப்பாவை பார்த்து நீங்களும் வாங்க நாங்க போவோம் என்று கூறுகிறார். இதை கேட்ட விஜய்யா உங்களைத்தான் போக சொன்னேன் இவரை ஏன் கூப்பிடுற என்று கேட்ட அதற்கு முத்துவின் அப்பா என்னோட மகன் கூப்பிட்டா நான் போகத்தான் வேணும் என்று கூறுகிறார். இதை கேட்ட விஜய்யா திகைத்து நிற்கிறார். இனி என்ன நடைபெற போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.   

Advertisement

Advertisement