தமிழக அரசியலில் தற்பொழுது புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கரூரில் நடந்த சோக நிகழ்வின் பின், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நேரில் பார்த்து, அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கத் துணிந்துள்ளது த.வெ.க கட்சி.

த.வெ.க தலைவர் விஜய், கரூர் நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களையும் தத்தெடுப்பதாக அறிவித்துள்ளார். இதனுடன், அந்த குடும்பங்களுக்காக தொடர்ந்து மாதம் 5000 ரூபா நிதி உதவியை வழங்குவதாகவும் த.வெ.க நிர்வாகியில் ஒருவரான மாரி வில்சன் அறிவித்துள்ளார்.
இதனை அறிந்த மக்கள் தற்பொழுது, “இது ஓர் அரசியல் நடவடிக்கை அல்ல, மனித நேயம் அடிப்படையிலான வெற்றி” எனக் கூறியுள்ளனர்.
கரூரில் சமீபத்தில் ஏற்பட்ட சோகம், பல குடும்பங்களை பாதித்து, உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்தக் கஷ்ட நேரத்தில், விஜய் நேரில் வந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிதி உதவியையும் அறிவித்தார். இந்த நடவடிக்கைகள் மக்கள் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
Listen News!