• Sep 19 2024

தன்னை 'டான்' என நினைத்த விஜய் வர்மா..! இறுதியில் இது தான் முடிவு! மிகுந்த ஏமாற்றத்தில் மாயா!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், கடந்த வாரம், ரியாலிட்டி ஷோவில் எலிமினேஷன் இல்லை. இந்த நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற்றப்படுவார்கள் என்பதை அறிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதன்படி, பிரதீப், நிக்சன், ஐஷுஇ மணி சந்திரா, விசித்ரா, விக்ரம், வினுஷா, விஜய் வர்மா, அக்‌ஷயா, மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் இந்த வார வெளியேற்றத்திற்கான நாமினேஷன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் எலிமினேஷன் நடந்திருந்தால், மாயா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பார் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

இந்த வார நிகழ்ச்சியில் விஜய் வர்மா வெளியேற்றப்படுவார்  என எண்ணியதுபோல அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். மாயா, விஜய் வர்மா, அக்ஷயா, பூர்ணிமா ஆகியோர் குறைந்த சதவீத வாக்குகளுடன் கடைசி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement