• Sep 20 2024

விஜய், ஷங்கர், விஜய் சேதுபதி, ஏஆர் ரஹ்மான் மற்றும் விக்ரம்.. ஒரே படத்தில் இது சாத்தியம் தான்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

ஒரே படத்தில் இரண்டு பிரபல நடிகர்களை நடிக்க வைப்பது பெரும் சவாலாக இருக்கும் நிலையில் ஒரே படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஏஆர் ரகுமான், விக்ரம் மற்றும் ஷங்கர் ஆகிய ஐந்து பேரும் கனெக்சன் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்த ஐந்து பேரின் வாரிசுகள் ஒரே படத்தில் இணைய இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் , ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.



மேலும் இந்த படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி மகன் சூர்யா மற்றும் இசையமைப்பாளராக ஏஆர் ரகுமான் மகன் ஏ.ஆர்.ஆர் அமீன் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. துருவ் விக்ரம், அதிதி ஷங்கர், ஏஆர் அமீன் மற்றும் சூர்யா ஆகிய நால்வரிடமும் ஜேசன் சஞ்சய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் விஜய், விஜய் சேதுபதி, ஷங்கர், ஏஆர் ரகுமான், மற்றும் விக்ரம் ஆகியோரின் வாரிசுகள் ஒரே திரைப்படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் இப்படி ஒரு படம் உருவானால் தமிழ் சினிமாவில் அது பெருமைக்குரிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement