• Sep 20 2024

ரஜினி, அஜித், சிவகார்த்திகேயனுடன் மோதும் ஜெயம் ரவி.. அவ்வளவு தைரியம் வந்துருச்சா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

வரும் தீபாவளி தினத்தில் ரஜினிகாந்த், அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதே நாளில் ஜெயம் ரவியும் தனது படத்தை களம் இறக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்தில் பிரபல நடிகர்களின் படங்கள் ஒன்று அல்லது இரண்டு வெளியாகும் என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்தின் ’வேட்டையன்’ அஜித்தின் ’விடாமுயற்சி’ சிவகார்த்திகேயனின் ’அமரன்’ ஆகிய மூன்று படங்கள் வெளியிட திட்டமிடப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் ’பிரதர்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இதற்கான பணிகள் முழு நீச்சல் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.



இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ரஜினி, அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுடன் ஜெயம் ரவி படம்  மோதும் என தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில வருடங்களாக ஜெயம் ரவியின் படங்கள் பெரிய அளவில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் மூன்று பிரபல நடிகர்களின் படங்களுடன் மோதுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒருவேளை தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த சில படங்கள் பின்வாங்கினால் ஜெயம் ரவியின் ’பிரதர்’ திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், வி டிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை எம் ராஜேஷ் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement