• Sep 20 2024

இதில் நடிப்பதற்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி !

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார்.

அந்தவகையில் இவரின் திரைப்படங்கள் மாதத்திற்கு ஒரு திரைப்படமாவது வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அவர் வில்லனாக நடித்த விக்ரம் படத்தை தொடர்ந்து அவரின் மாமனிதன் திரைப்படமும் வெளியாகியிருந்தது.

அத்தோடு அடுத்தும் அவரின் திரைப்படங்கள் வரிசையாக வெளியாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி சமீப நாட்களாக ஷாருக் கானின் ஜவான் திரைப்படத்திலும், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ள வெப் சீரிஸ் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகின்றது.அதாவது பல மொழிகளில் உருவாகும் அந்த வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

அத்தோடு அந்த வெப் சீரிஸில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதியின் சம்பளம் ரூ. 35 கோடி என தகவல் பரவி வருகிறது. இதனை மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement