• Feb 22 2025

விஜய் சேதுபதியின் விடுதலை 2...இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Mathumitha / 3 months ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை -2 படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை நவம்பர் 26ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இசையமைப்பாளர் இளையராஜா இதற்கு இசையமைத்துள்ள நிலையில், திரைப்படம் சமூக அரசியலையும் உணர்ச்சிகரமான கதையையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.2023 ஆம் ஆண்டு வெளியாகிய விடுதலை முதல்பகுதியின் வெற்றிக்குப் பிறகு, இரண்டாம் பகுதியின் வருகை ரசிகர்களிடையே அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் தற்போது இசை மற்றும் ட்ரெய்லரில் வெளிப்படும் முக்கிய காட்சிகள் மற்றும் சம்பவங்களை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். விடுதலை -2 திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement