விஜய் நடிக்கும் லியோ படத்தின் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த மாத இறுதியில் படக்குழுவினர் அனைவரும் தனிவிமானம் மூலம் காஷ்மீருக்கு சென்றனர்.
பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அங்கு ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக ஷுட்டிங் நடைபெற்று வருகின்றது.
இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இந்த நிலையில் விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதலில் வெளியாகியிருந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் இவர்களுடன் விஜய்சேதுபதியும் நடித்திருந்தார். இப்படத்தின் ஷுட்டிங் போது இப்படத்தில் பணியாற்றும் பிரபலத்தின் பிறந்தநாளில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
அப்போது விஜய்யும் விஜய்சேதுபதியும் மாறி மாறி முத்தமிட்டுள்ளனர். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.
Full Video : @actorvijay's Charm Off screen >>> On Screen 😍 From the Sets Of #Master #ThalapathyVijay #LeoFilm https://t.co/WTVTRESSJy pic.twitter.com/d03Z7FuR7i
Listen News!