• Apr 26 2024

விஜயகாந்த் படக்கதையை திருடினாரா விஜய் பட இயக்குநர்-விசாரணையில் வெளிவந்த உண்மை

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லீ சக்சஸ்புல் இயக்குநராக இருந்தாலும், அவர் இயக்கும் படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்குவது தொடர்கதை ஆகி வருகிறது.

இயக்குநர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லீ. மேலும் இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மேலும் அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை அடுத்து நடிகர் விஜய்யின் தெறி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் இயக்குநர் அட்லீ.


அட்லீ விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால், தெறி படத்தை செம்ம மாஸாக எடுத்து வெற்றி கண்டார். அத்தோடு தெறி படத்தில் பணியாற்றியபோது அட்லீயின் உழைப்பை பார்த்து வியந்துபோன விஜய், அடுத்தடுத்து தான் நடித்த மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பை அட்லீக்கு வழங்கினார். மேலும் இந்த மூன்று படங்களுமே பிரம்மாண்ட வசூல் சாதனையை நிகழ்த்தின.


இவ்வாறுஇருக்கையில்  இயக்குநர் அட்லீ சக்சஸ்புல் இயக்குநராக இருந்தாலும், அவர் இயக்கும் படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருகின்றன. அதன்படி அவரது ராஜா ராணி படம் மெளன ராகம் படத்தின் காப்பி என்றும், தெறி படத்தின் கதை விஜயகாந்தின் சத்ரியன் பட கதையோடு ஒத்து இருந்ததாகவும், மெர்சல் படம் ரஜினியின் மூன்று முகம் மற்றும் கமலின் அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களோடு ஒப்பிட்டு கதைக்கப்பட்டது.


அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படமும் அண்மையில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. அத்தோடு  விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் கதையை திருடி தான் அட்லீ ஜவான் படத்தை எடுத்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.


மேலும் இதுகுறித்து விசாரணை நடத்திய தயாரிப்பாளர் சங்கம் அட்லீயின் ஜவான் படத்தின் கதையும், பேரரசு படத்தின் கதையும் ஒன்றல்ல என்பதை உறுத் செய்தது. இதன்மூலம் அட்லீ மீதான கதை திருட்டு புகார் பொய் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார் அட்லீ. ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement