• Jun 02 2024

6மாத காலமாக சிகிச்சையில் இருந்த விஜய் ஆண்டனி மகள்... முதல் கட்ட விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்தமகள் மீரா இன்றைய தினம் அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் இருந்த தனது அறையில் மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் நேற்று இரவு குடும்பத்தினரிடம் பேசாமல் ஒரு விதமான சோகத்திலேயே மீரா இருந்திருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கின்றது.


அந்தவகையில் நேற்றைய தினம் வீட்டில் யாரிடமும் முகம் கொடுத்துப் பேசாமல் மீரா தனது ரூமிற்குத் தூங்கச் சென்றுள்ளார். பின்னர் காலை நீண்ட நேரம் ஆகியும் மீரா எழுந்திருக்காமையினால் குடும்பத்தினர் கதவை தட்டி இருக்கின்றனர். ஆனால் கதவை நீண்ட நேரமாக அவர்கள் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அந்த சமயத்தில் மின்விசிறியில் தொங்கியபடி மீரா காணப்பட்டுள்ளார். இதனையடுத்து விஜய் ஆண்டனி குடும்பத்தினர் அவரை பத்திரமாக இறக்கி உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைகளை நடத்திய வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில் மீரா தற்கொலை செய்துகொண்ட மின்விசிறியில் உள்ள கை ரேகைப் பதிவுகளை தடவியல் நிபுணர்கள் எடுத்துள்ளனர். 


அதுமட்டுமல்லாது அவரது அறையில் அவர் கைப்பட எழுதிய கடிதங்கள் எதுவும் இருக்கின்றனவா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். அத்தோடு அவரின் செல்போனையும் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் ஏற்கெனவே இவர் கடந்த 6மாத காலமாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்  ஒன்று வெளியாகி இருக்கின்றது. இந்தளவிற்கு மீரா மன அழுத்ததினால் மீரா பாதிக்கபட்டமைக்கு காரணம் என்ன..? எனக் கண்டறியும் நோக்கில் மீராவிற்கு சிகிச்சை அளித்த உளவியல் நிபுணர்களையும் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளனர்.

Advertisement

Advertisement