• Feb 03 2025

MGR க்கு இதயக்கனி மாதிரி நானும் விஜய் கூட இருப்பேன்.! பிரபல இயக்குநர் விடாப்பிடி

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான ஸ்டார், ரட்சகன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் தான் பிரவீன் காந்தி. இவர் சில சமயங்களில் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் காணப்படும். சமீபத்தில் கூட வெற்றிமாறன், ரஞ்சித் ஆகியோரின் வருகைக்கு பிறகு தான் தமிழ் சினிமா தளர்ச்சி கண்டது என அதிரடியாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், எம்ஜிஆருக்கு இதயக்கனி போல நானும் விஜய் கூடவே இருப்பேன் என இயக்குனர் பிரவீன் காந்தி  வழங்கிய பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.

அதாவது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக தற்போது விஜய் அரசியலில் பயணித்து வருகின்றார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள், மக்கள் என பலரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றார்கள். இன்றைய தினம் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகின்றது.


இவ்வாறு சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் கொடி கட்டி பறந்து வருகின்றார் விஜய். இவர் அடுத்தடுத்து மக்களது நலனுக்காக பல பணிகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு தமது தேர்தல் இலக்கு எனவும் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான நிலையிலையே எம்ஜிஆருக்கு இதயக்கனி போல நானும் விஜய் கூடவே இருப்பேன் என பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய வெற்றியை பார்க்கும் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மத்தியில் நான் முதலாவதாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.




Advertisement

Advertisement