• Feb 03 2025

நடிகர் கிஷான் தாஸுக்கு திடீரென நடந்து முடிந்த திருமணம்.! இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் வந்த பல சிறப்பான படங்களில் நடித்தவரே கிஷான் தாஸ். இவர் இயக்குநர் தர்புகா சிவாவின் தலைமையில் உருவாகி 2019 ம் ஆண்டு வெளியான 'முதல் நீ முடிவும் நீ.' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வெளியிட்டவுடனேயே மக்கள் மத்தியில் அதிகளவு பாராட்டை பெற்றுக் கொண்டது.

மேலும் இந்த படத்தில் " முதல் நீ முடிவும் நீ..." என்ற காதல் தோல்வி பாடல் மக்கள் மத்தியில் அதிகளவு இடத்தை பெற்றுக்கொண்டது. இந்தப் பாடல் ரசிகர்கள் பலரதும் விருப்பத்திற்குரிய பாடலாக அமைந்திருந்தது. 


இந்த நிலையில், நடிகர் கிஷான் தாஸ் தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் காதலியான சுசித்ராவை திருமணம் செய்துள்ளார். தற்போது இந்த தம்பதியினருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிஷன் தாஸ் மற்றும் சுசித்ரா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இவ்வாறான நிலையிலேயே இந்த ஜோடியின் திருமணம் நேற்று முன்தினம் நடந்து முடிந்துள்ளது.




Advertisement

Advertisement