• Oct 09 2024

பிரபல நடிகையுடன் வெளிநாட்டில் இருக்கும் விஜய்- வெளியாகிய புகைப்படத்தால் குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் விஜய். இவரது நடிப்பில் தற்பொழுது லியோ திரைப்படம் உருவாகி வருகின்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் த்ரிஷா,கௌதம் மேனன்,அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்திருக்கிறனர்.

அனிரூத் இசையில் உருவாகி வரும் இப்படத்தினை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன. வரும் அக்டோபரில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விஜய் வெளிநாட்டுக்கு வெகேஷன் சென்று இருக்கிறார். 


அவர் லண்டனுக்கு தான் சென்று இருக்கிறார் .ஆனால் தற்போது அவர் நார்வேவில் இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்து வெங்கட் பிரபு உடன் தான் நடிக்க இருக்கும் தளபதி68 படத்தை தொடங்கும் முன்பு அவர் இப்படி வெளிநாட்டுக்கு சென்று இருக்கிறார்.


இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் தற்போது நார்வேயில் தான் இருக்கிறார். விஜய் த்ரிஷா உடன் வெளிநாட்டில் சுற்றுவதாக ஒரு போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.இருப்பினும் அது எடிட், உண்மையல்ல என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement