• Apr 26 2024

காதல் மனைவிக்கு பிரபல ஹோட்டல் ஒன்றில் விருந்து வைத்த விக்னேஷ்சிவன்- வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் கடந்த 2016ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து இந்த ஆண்டு ஜூன் மாதம் பாரம்பரியமாக திருமணம் செய்து கொண்டனர். 

மேலும் அக்டோபர் 9ஆம் தேதி வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக தம்பதியினர் அறிவித்தனர்.இதனால் பல சர்ச்சைகளில் சிக்கினார்கள்.இதனை அடுத்து தற்பொழுது சென்னையிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் நயனுக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.


இவர்கள் உணவருந்திய பின் ஹோட்டல் ஊழியர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருகான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகின்றார்.

அதே போல விக்னேஷ் சிவன் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 62 திரைப்படத்தை இயக்கவுள்ளார்.இந்த ஆண்டின் படப்பிடிப்பானது டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement