• Apr 27 2024

இந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை- அடடே இவர் சர்ச்சை நடிகராச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் அனிரூத்தின் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த 2019ம் ஆண்டே ஆரம்பமாகியது.இருப்பினும் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் இந்தியன் 2 படக்குழு கடந்த செப்டம்பரில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வருகின்றார்கள்.


அத்தோடு இப்படம் அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ளார்.

இதற்கான அறிவிப்பை யோக் ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மேக் அப் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.யோக்ராஜ் சிங் 50க்கும் அதிகமான ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரராக வாழ்க்கையை தொடங்கிய யோக்ராஜ் சிங், இந்திய அணிக்காக 6 ஒரு நாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார்.


சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு இவர் பெயர் போனவர். அணியில் இருந்து தனது மகன் யுவராஜ் சிங் நீக்கப்பட்டதற்கு தோனியே காரணம் என்று குற்றச்சாட்டை கிளப்பி யோக்ராஜ் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இவரும் இந்த படத்தில் இணைந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.


Advertisement

Advertisement

Advertisement