• Jan 18 2025

பிறந்தநாள் கொண்டாடும் பிரபலத்தை வாழ்த்திய 'வேட்டையன்' படக்குழு !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் தனக்கென்றே உரித்தான மிரட்டும் நடிப்புடன் தோன்றும் நடிகர் ஃபஹத் ஃபாசில் இந்திய அளவில் பேசப்படும் ஓர் நடிகராக உயர்ந்து நிக்கிறார்.திரைத்துறை பயணத்தின் ஆரம்பத்தில் பல சறுக்கல்களை கண்ட இவரின் உழைப்பு இன்று அதற்கான ஓர் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது.

9 Fahadh Fazil ideas | actors ...

தமிழிலோ மலையாளத்திலோ ஹீரோ வில்லன் பாகுபாடேதும் காட்டாமல் தனது பாத்திரத்திற்கான மொத்த வித்தையையும் இறக்கி தன்னை மட்டுமே ரசிக்க வைக்கும் அளவு ஈடுபாட்டுடன் நடிக்கும் ஃபஹத் ஃபாசில் சிறந்த  நடிகர் என்ற அங்கீகாரத்தை ரசிகர்கள் மனங்களில் வென்றுள்ளார்.

Image

இன்றைய தினம் தனது 42 வது பிறந்த நாளை கொண்டாடும் ஃபஹத் ஃபாசிலுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளன.இந்நிலையில் ஃபஹத் ஃபாசிலுக்கு  "வேட்டையன்" படக்குழு  சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது லைகா புரொடக்ஷன்ஸ்.


Advertisement

Advertisement