வெற்றிமாறன் தயாரித்து வரும் திரைப்படத்தின் டைட்டில் திடீரென மாற்றப்பட்டு தனுஷ் நடித்த படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் என்பதும் இவர் தற்போது ’விடுதலை 2’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சில படங்களை தயாரித்து வரும் நிலையில் அதில் கவின் நடித்த ’மாஸ்க்’ படமும் ஒன்று என்பது தெரிந்தது. அதேபோல் அவர் பிரபல குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் ’மபொசி’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் விமல் மற்றும் சாயாதேவி நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
’மபொசி’ என்றால் ‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என்று விரிவாக்கம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கு திடீரென டைட்டில் மாற்றப்பட்டு ’சார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனுஷ் நடித்த ’வாத்தி’ என்ற திரைப்படத்திற்கு தெலுங்கில் ’சார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட நிலையில் அதே டைட்டிலை வெற்றிமாறன் தனது படத்திற்கும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விமல் இந்த படத்தில் ஆசிரியர் கேரக்டரில் நடித்து வருவதாகவும் இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Listen News!