• Jan 19 2025

பவன் கல்யாண் 3வது மனைவிக்கு ரூ.1800 கோடி சொத்து இருக்கிறதா? சினிமாவில் இருந்து விலக திட்டம்?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மூன்றாவது மனைவிக்கு ரூ.1800 கோடி சொத்து இருப்பதாகவும் தற்போது பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஆகி உள்ள நிலையில் அவர் சினிமாவில் இருந்து விலகப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாண் அரசியல் கட்சியான ஜனசேனா என்ற கட்சி, தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் பவன் கல்யாண் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சில முக்கிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியான ரஷ்யாவை சேர்ந்த அன்னா லெஷ்னா என்பவருக்கு ரூ.1800 கோடி சொத்து இருப்பதாகவும் இவருக்கு சிங்கப்பூரில் ஹோட்டல்கள் மற்றும் ரஷ்யாவில் பல பிசினஸ்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1997 ஆம் ஆண்டு நந்தினி என்பவரை பவன் கல்யாண் திருமணம் செய்த நிலையில் 2008 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் நடிகை ரேணு தேசாய் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் 2012 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து விட்டு பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் தான் ரஷ்யாவை சேர்ந்த அன்னா லெஷ்னா  என்பவரை பவன் கல்யாண் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடந்த முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் கூட அவரது மனைவி அன்னா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்று உள்ள பவன் கல்யாண் இனிமேல் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் ஏற்கனவே நடித்துக்கொண்டிருக்கும் படங்களை மட்டும் அவர் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து நிரந்தரமாக விலகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement