• Apr 23 2026

மாளவிகா மோகனனுடன் இருக்கும் 2 இளைஞர்கள் யார்? வெளிநாடு போனாலே ஒரே ஜாலி கொண்டாட்டம் தான்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை மாளவிகா மோகனா அவ்வப்போது வெளிநாடு சுற்றுப்பயணம் செய்து அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் ஆக வெளிநாடு சென்றுள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களில் ஒன்றில் அவருடன் இரண்டு இளைஞர்கள் இருப்பதை அடுத்து அந்த இளைஞர்கள் யார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் அதன் பிறகு விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’மாறன்’ உள்பட சில படங்களில் நடித்தார் என்பதும் தற்போது அவர் விக்ரமுடன் ’தங்காலான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஹிந்தியில் அவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது வெளிநாடு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிநாட்டில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

தண்ணீருக்குள் மீன்கள் துள்ளி எழும் போது அதில் கால் வைத்துக் கொண்டிருக்கும் வீடியோ, இரண்டு இளைஞர்களுடன் நடந்து செல்லும் புகைப்படம், மலை மற்றும் கடல் பகுதியில் அமைந்த காட்சி,  சாலையில் ஒரு ஆமை ஊர்ந்து செல்லும் காட்சி உள்பட அழகிய காட்சிகளை அவர் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement