தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அமெரிக்காவில் விறுவிறுப்பாக கிராபிக்ஸ் காட்சிகளின் பணி நடைபெற்று வந்ததாகவும் இந்த பணிகளை மேற்பார்வை செய்ய வெங்கட் பிரபு சமீபத்தில் அமெரிக்கா சென்றதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் ’கோட்’ படத்தின் விஜய் காட்சிகளுக்கான கிராபிக்ஸ் பணிகள் முடிவடைந்து விட்டதாக கூறி விஜய் கிராபிக்ஸ் பணிகள் இடையே உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பல ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்த ’லோலா விசுவல் எபெக்ட்ஸ்’ என்ற நிறுவனம்தான் ’கோட்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகளை செய்து முடித்துள்ளதாகவும் இதன் அவுட்புட்டை காண ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபுவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் விஜய் படத்தில் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட படமாக ’கோட்’ படம் அமைந்துள்ளதை அடுத்து இந்த படம் அவரது ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பார்வதி நாயர் ஆகிய நான்கு நாயகிகள் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், , விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Successfully completed the VFX work with @actorvijay na at @lolavfx can’t wait for the output!!! #TheGreatestOfAllTime #TheGOAT #aVPhero @archanakalpathi @aishkalpathi @hariharalorven pic.twitter.com/6BL29XOoXK
Listen News!