• Jun 12 2026

வெள்ளிவிழா நாயகன் மோகனின் 'ஹாரா' பட ட்ரைலர் ரிலீஸ்! அனல் பறக்கும் ஆக்சன்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் தரமான கம்பேக்  கொடுத்துள்ளார் மைக் மோகன். அதாவது மைக் மோகன் நடித்த 'ஹரா' படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மைக் மோகனின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் சந்தோஷத்தில் திகைத்துள்ளார்கள்.

இந்த படத்தின் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் டிரைலர் படம் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் மைக் மோகனுக்கு ஜோடியாக அயலில, ஹார்ட் பீட் போன்ற வெப் சீரியல்கள் கலக்கி வரும் அனுமோல் நடித்துள்ளார். 


மேலும் முக்கிய கேரக்டரில் மொட்டை ராஜேந்திரன், ஜோகி பாபு மூத்த நடிகர் சாருஹாசன் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின்  டிரைலரை பார்த்த ரசிகர்கள் இது கண்டிப்பாக வெற்றி பெறும் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

இதேவேளை, இந்த படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஏழாம் தேதி ரிலிஸ் ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement