• Jan 10 2025

தீபக் சேப் கேம் விளையாடுறாரு! அதை சொல்றதுக்கு யாருக்கும் தைரியம் இல்லை! கோபத்தில் வர்ஷினி

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8ல் தற்போது ஆடிய ஆட்டம் என்ன டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. தங்களது கேரக்டருக்கு ஏற்றால் போல மாறி போட்டியாளர்கள் நடித்து வருகிறார்கள். அத்தோடு சூப்பராக டான்ஸ் ஆடி என்டர்டைன் செய்கிறார்கள். இந்நிலையில் இன்றைய நாள் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. 


தற்போது வெளியாகிய ப்ரோமோவில் வர்ஷினி " நான் அப்படி என்ன தப்பு பண்ணுனேன்? என்ன கேட்டேன் என்ன ரொம்ப ஓவரா பண்ணுறீங்க? உங்களுக்கு மட்டும் தான் விளையாட முடியும்னு நினைக்கிறீங்களா? நீங்க சேப்டி இல்ல. அது எதனால் என்று சொல்லவா. சொல்லிருவன் ஆனா இங்க யாருக்கும் சொல்ல தைரியம் இல்லை"  என்று கோபமாக கத்தி விட்டு செல்கிறார். 


இதற்கு தீபக் " அவங்க ஏதோ ஒரு கன்வே மாதிரி கொண்டு வந்து அதை என் மேல திணிக்க பார்க்குறாங்க, இதுக்கெல்லாம் ஹேட் ஆகுனா நாங்க ஒன்னும் பண்ண முடியாது"  என்று முத்துவிடம் சொல்கிறார். வர்ஷினி அழுவதை பார்த்து மற்ற போட்டியாளர்கள் சமாதானம் செய்கிறார்கள். அப்போது " எங்களால முடிஞ்சத பண்ணுறோம். நாங்க எல்லாம் வந்து வேர்த் இல்லை. அவரு சேப் கேம் விளையாடுறாரு, ஆஷா இருக்குறாரு தயவு செய்து புரிஞ்சிக்கோங்க" என்று தீபக் பற்றி சொல்கிறார் அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது

Advertisement

Advertisement