• Jan 27 2023

வலிமை லைஃப்டைம் கலெக்‌ஷனை முதல் நாளே அடிச்சுதூக்கிய வாரிசு- கர்நாடகாவிலும் வசூல் வேட்டை நடத்திய துணிவு

Listen News!
stella / 2 weeks ago
image

Advertisement

Listen News!

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்றைய தினம் மிகவும் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் துணிவு.இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்திருந்ததோடு போனிகபூர் இப்படத்தை தயாரித்திருந்தார்.

 வங்கி கொள்ளையை மையப்படுத்திய இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த ஒரு படமாக இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நம்பர் 1 அஜித் தான் என்றும், ஓபனிங் கிங் அஜித் தன்னை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியுள்ளார் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.


அதாவது இப் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் முதல் நாள் முடிவில் மட்டுமே படம் ரூ. 25 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாம், வெளிநாடுகளிலும் படத்திற்க நல்ல வரவேற்பு இருக்கிறதாம்

அதேபோல் விஜய்யின் வாரிசு படத்தின வசூலுக்கும் எந்த குறையுமே இல்லை, தமிழகத்தில் படம் ரூ. 22 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.தமிழகத்தில் எவ்வளவு வசூல் என தெரிந்துவிட்டது, தற்போது கர்நாடகா வசூல் விவரம் வந்துள்ளது.


830க்கும் மேற்பட்ட ஷோவில் துணிவு ஒளிபரப்பாகிறது, இதன்மூலம் முதல் நாளில் படம் ரூ. 4.77 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதேபோல் விஜய்யின் வாரிசு படம் ரூ. 5.55 கோடி 1000 ஷோக்களில் வசூலித்துள்ளதாம் என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement

Advertisement