• Jul 22 2026

ஜிம் பாடி நிக்கோலாவை சமாளிக்க குங்ஃபூ பழகும் வரலட்சுமி..! தெறிக்க விடும் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படும் நடிகை வரலட்சுமிக்கு கடந்த ஜூலை மூன்றாம் திகதி தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றது. எனினும் இவர்களுடைய திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதனால் வரலட்சுமி சரத்குமாரிடம் உங்களுடைய திருமண புகைப்படங்களை வெளியிடுங்களேன் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவதால் கூடிய விரைவில் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவார் என தெரிய வருகின்றது.

அவர்களுடைய திருமணம் நிக்கோலாய் குடும்ப வழக்கப்படியும், பாரம்பரிய முறைப்படியும் நடந்ததாக கூறப்படுகின்றது.


இந்த நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் முடிந்த பிறகு தன்னுடைய நண்பர்களிடம் குங்ஃபூ பயிற்சி எடுத்துக் கொள்ளும் ஹாப்பி மொமென்ட்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகின்றது.

மேலும் நிக்கோலாய் சத்தேவ் ஜிம் பாடி என்பதால் அவரை சமாளிக்க தான் நடிகை வரலட்சுமி இப்படி குங்ஃபூ எல்லாம் கற்றுக் கொள்கின்றார்  என ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement