• Apr 27 2024

வெளியானது வடிவேலின் "அப்பத்தா" பாடல்..கடுப்பான இயக்குனர் ஷங்கர்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

வடிவேல் தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் ஆவார். மேலும் இவர் மதுரையை சேர்ந்தவர் ஆவார். மேலும் இவர் 1988 இல் டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.


வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.அதுமட்டுமல்லாமல் இவருக்கு சரோஜினி என்ற மனைவியும் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகிய மகள்களும், சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.


மேலும் இவர் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் உள்ள முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்தார். இவரின் நகைச்சுவையை பார்ப்பதுக்கு ஒரு கூட்டமே உள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். 


இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்துவிட்டு பாதியிலேயே வெளியேறியதன் காரணமாக ஷங்கர் அவர்மீது புகார் கொடுத்திருந்தார். ஷங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்த ரெட் கார்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதையடுத்து மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார் வடிவேலு. தற்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். 


சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளது.  இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அப்பத்தா என பெயரிடப்பட்டு உள்ள அப்பாடலை வடிவேலு தான் பாடி இருந்தார். 


இந்நிலையில் இப்பாடல் வரிகள் சர்ச்சையில் சிக்கி உள்ளன. அதன்படி இதில் இடம்பெறும் “நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தேன்... சில ‘நாய்’யால நான் சீக்காளி ஆனேன்” என்கிற வரிகள் தான் இந்த சர்ச்சைக்கு காரணம். 


இயக்குனர் ஷங்கர் உடனான பிரச்சனையால் தான் அவர் நடிக்க முடியாமல் போனது என்பது ஊருக்கே தெரியும். அப்படி இருக்கையில் அவரை வம்பிழுக்கும் வகையில் தான் இப்படி ஒரு வரியை அப்பாடலில் வைத்துள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement